Wednesday 29 April 2020

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையினால் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் வாகனங்களுக்கு கிருமி தொற்றுநீக்கி விசிறும் செயற்பாடு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபையினால் கொரோனா தடுப்பு நடவடிக்கையின்  கீழ் வாகனங்களுக்கு கிருமி தொற்றுநீக்கி விசிறும்  செயற்பாடு   இடம்பெற்றது.  


(எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச சபையினால் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு செயற்திட்டமாக மட்டக்களப்பு நகரையும் மண்முனை மேற்கு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு - வவுணதீவு வீதியால் செல்லும் சகல வாகனங்களும் இன்று கிருமி தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

வவுணதீவு பொலிஸார் மற்றும் விமானப்படையினரின் ஒத்துழைப்புடன்  மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜா தலைமையில் இந்த நடவடிக்ைக இடம்பெற்றது.

இதன்போது மண்முனை  மேற்கு பிரதேசத்திற்கு உள்நுளையும் வாகனங்களும் பிரதேசத்திலிருந்து வௌிச்செல்லும் வாகனங்களும் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களில் கொரோனா கிருமி தொற்றை தடுக்கும் வகையில் கிருமி தொற்றுநீக்கி விசிறி தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

Saturday 18 April 2020

படுவான்கரை பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையோர் வீட்டினுள்ளே முடக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கமுடிந்தது.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையோர்  வீட்டினுள்ளே முடக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கமுடிந்தது.


(எஸ்.சதீஸ்)

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் படுவான்கரை பிரதேசத்தில் அத்தியவசிய சேவைகள் மற்றும் விவசாயிகள் தவிர்ந்த ஏனையோர் ஊரடங்குச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளதனை இன்று அவதானிக்கமுடிந்தது.

அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இப் பிரதேசத்திலுள்ள  பிரதான வீதிகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை இப் பிரதேசத்தில் அத்தியவசிய சேவையின் பொருட்டு பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் போன்றவற்றின் அதிகமான ஊழியர்கள் விடுமுறை நாட்களிலும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றதனையும் காணமுடிந்தது. 
 

மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கொரோனா தொற்றுநோய் தொடர்பான விழிப்பினர்வு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால்  கொரோனா தொற்றுநோய் தொடர்பான விழிப்பினர்வு நடவடிக்கைகை  ​முன்​னெடுத்துவருகின்றனர்.



(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் கொரோனா தொற்றுநோய் தொடர்பான விழிப்பினர்வு நடவடிக்கைகைகளை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான சுகாதாரப் பிரிவு உத்தியேதகத்தர்களால் ​முன்​னெடுத்துவருகின்றனர்.


இதில் ஒரு அங்கமாக கடந்த வாரம் தொடக்கம் கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுக சேவையாளர்களுக்கு  கோரோனா நோயின் தாக்கம் தொடர்பிலும் தற்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்பினர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் குறிப்பாக மரணவீடுகளிலும் நிவாரணங்கள் பெறும்போதும்  மிகவும் எச்சரிக்கையுடன் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைவாக பொதுமக்கள்  செயற்படவேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.


இந் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை)  ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற கிராமங்களில் இடம்பெற்றது.

இதன்போது மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். இளங்கோ மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thursday 9 April 2020

வவுணதீவுவில் சட்டவி​ரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை - ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், கசிப்பு எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்கள், மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவுவில் பொலிஸ் பிரிவில் சட்டவி​ரோதமான முறையில் உற்பத்தி செய்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸார்  முற்றுகையிட்டதில் ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், கசிப்பு எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

(வவுணதீவு எஸ்.சதீஸ்) - 

Friday 20 December 2019

வணக்கும் நண்பர்களே....

 துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!

- பெஞ்சமின் பிராங்கிளின்