மட்டக்களப்பு வவுணதீவுவில் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸார் முற்றுகையிட்டதில் ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், கசிப்பு எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
(வவுணதீவு எஸ்.சதீஸ்) -
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்த கசிப்பு உற்பத்தி நிலையங்களையும் விற்பனை நிலையங்களையும் வவுணதீவு பொலிஸார் முற்றுகையிட்டதில் ஒரு தொகுதி கசிப்பு கொள்கலன்களும், கசிப்பு எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாகவும் கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் போன்றோரின் ஒத்துழைப்புக்கமைவாகவும் மேற்படி கசிப்பு நிலையம் முற்றுகையுடப்பட்டதுடன் அதனுடன் தொடர்புப்படோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா, கரையாக்கந்தீவு, காந்துநகர், காஞ்சிரங்குடா, பனையறுப்பான், பாவற்கொடிச்சேனை போன்ற கிராமங்களில் நேற்று இரவு, மற்றும் இன்று வியாழக்கிழமை காலை இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இதில் கைது செய்யப்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட கசிப்பு பரல்களையும், கசிப்பு போத்தல், கொள்ளகலன்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை பொலிஸாருடன் இணைந்து மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் பார்வையிட்டதுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது இதுவரை 17 வடிசாராயம் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி இன்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment