Saturday, 18 April 2020

மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கொரோனா தொற்றுநோய் தொடர்பான விழிப்பினர்வு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால்  கொரோனா தொற்றுநோய் தொடர்பான விழிப்பினர்வு நடவடிக்கைகை  ​முன்​னெடுத்துவருகின்றனர்.



(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் கொரோனா தொற்றுநோய் தொடர்பான விழிப்பினர்வு நடவடிக்கைகைகளை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான சுகாதாரப் பிரிவு உத்தியேதகத்தர்களால் ​முன்​னெடுத்துவருகின்றனர்.


இதில் ஒரு அங்கமாக கடந்த வாரம் தொடக்கம் கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுக சேவையாளர்களுக்கு  கோரோனா நோயின் தாக்கம் தொடர்பிலும் தற்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்பினர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் குறிப்பாக மரணவீடுகளிலும் நிவாரணங்கள் பெறும்போதும்  மிகவும் எச்சரிக்கையுடன் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைவாக பொதுமக்கள்  செயற்படவேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.


இந் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை)  ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற கிராமங்களில் இடம்பெற்றது.

இதன்போது மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். இளங்கோ மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








No comments:

Post a Comment