மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையோர் வீட்டினுள்ளே முடக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கமுடிந்தது.
(எஸ்.சதீஸ்)
அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இப் பிரதேசத்திலுள்ள பிரதான வீதிகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை இப் பிரதேசத்தில் அத்தியவசிய சேவையின் பொருட்டு பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் போன்றவற்றின் அதிகமான ஊழியர்கள் விடுமுறை நாட்களிலும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றதனையும் காணமுடிந்தது.
No comments:
Post a Comment